இன்றைய விவாதம் - பயன்படுத்திய கார்களை வாங்குவது லாபமா? நஷ்டமா?

                பயன்படுத்திய கார் மார்க்கெட் இப்போது புதிய கார் மார்கெட்டைவிட நல்ல முன்னேற்றத்தை கொண்டிருக்கிறது. ஹோண்டா, டொயோட்டா போன்ற கார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற ப்ரீமியம் நிறுவனங்களும் பிரத்யேக பயன்படுத்திய கார் டீலர்ஷிப்புகளை திறக்க ஆரம்பித்துவிட்டன. 


இந்நிலையில், பயன்படுத்திய கார்களை வாங்குவதில் சில சிக்கனங்களும் இருக்கிறது, சிக்கல்களும் இருக்கிறது.


பயன்படுத்திய கார்கள் - ப்ளஸ்

     குறைவான விலை; நிறைவான கார்

    முதல்முறையாக கார் வாங்குவபவர்கள், முழுமையாக பழக யூஸ்டு கார் சிறந்தது

     பல வகையான கார்களும், ஒரே விலை விகிதத்துக்குள் கிடைக்கும்


பயன்படுத்திய கார்கள் - மைனஸ்

    ஓடோமீட்டர் டாம்பரிங் குறித்த அச்சம்

    'என்னுடைய கார்' என்ற முழுமையான உணர்வு கிடைக்காதது
    திரும்ப விற்பது கடினம்


பயன்படுத்திய கார்கள் - கேள்விகள்


    பயன்படுத்திய கார்களை வாங்குவது லாபமா? நஷ்டமா?


    டீலர்களிடம் வாங்கலாமா? நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வாங்கலாமா?


    OLX, Quikr போன்ற வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பலாமா? 

4 comments:

  1. முதலில உங்களைப் பற்றிய விரிப்பைத் தாருங்கள்.
    அடுத்து பிறமொழிச் சொல்களை நீக்கிச் சிறந்த தமிழ் பதிவாகத் தாருங்கள்.

    பாவித்த (யூஸ்டு) கார்களை வாங்குவது நஷ்டமே!
    அதற்கான பேணுகைச் செலவு அதிகமே!

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் சுய விபரத்தை ஒரு பதிவாக பகிருங்கள்... வாசகர்கள் அதிகமாகும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இது கார் வாங்கி ஓட்டத் துடிக்கும் புதுப்பணக்காரர்களுக்கும், ஏற்கனவே கார் வைத்திருக்கும் சீமான் சீமாட்டிகளுக்கும் ஆனதாக இருப்பதால்..என்னைப்போன்ற சைக்கிளையே ஓட்ட முடியாதவர்களுக்கு தேலையில்லாத ஒன்று

    ReplyDelete


  4. உபயோகப்படுத்திய மகிழுந்துகளை வாங்குவதை விட புதியதை வாங்குவதே மேல். காரணம் பழையதை வாங்கினால் ஆகும் பராமரிப்பு செலவு புதிய மகிழுந்து விலையை விட அதிகம் ஆக வாய்ப்பு அதிகம். மேலும் தற்போது திருடப்பட்ட வாகனங்களும் எண்கள் மாற்றப்பட்டு விற்பனைக்கு வருவதால் அவைகளை தெரியாமல் வாங்கிவிட்டால் பின்னர் காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டி இருக்கும். எனவே ‘சுண்டக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்’ என்ற பழமொழியை இங்கு நினைவு கொள்வது நல்லது.

    ReplyDelete