சிகரம்  பாரதியின்  வேண்டுகோளுக்கிணங்க....


             விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண் மட்டுமே குற்றவாளி போன்று பிரதானப்படுத்தப்படுகிறார்.


              சம்பந்தப்பட்ட ஆண் அம்பலப்படுத்தப்படுவதில்லை என்றும், அவர்களை பாதுகாப்பது போன்று காவல்துறை நடந்துகொள்வதாகவும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.


              இந்த குற்றச்சாட்டு குறித்து உங்களது கருத்துக்கள்,


             அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்,


             சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்


                                    போன்றவற்றை முன்வைத்து விவாதிக்கலாம்.

                   பெற்றோர்கள் மீதான பாசத்திலும், அவர்களை கவனிப்பதிலும் விஞ்சி நிற்பது ஆண்களா ? அல்லது பெண்களா ?


இந்த தலைப்பை நீங்கள் இரண்டு விதமாக அணுகலாம். நீங்கள் உங்கள் பெற்றோரை எப்படி கவனித்ததையும், கவனித்து கொண்டு இருப்பதையும், இன்னொரு பக்கம், உங்கள் மகனோ, மகளோ உங்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள், எனவும் விவாதிக்கலாம்.


இதை பற்றி உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் அனைவரும் இங்கே பேசலாம். உங்கள் கருத்துக்களை யாரையும் புண்படுத்தாமல் நல்ல முறையில் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்களின் வாதங்களை எடுத்து வையுங்கள்.

 
                 அண்மை காலமாக உடல் தகுதியின்மை பிரச்னையால் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதையொட்டி திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கலாமா?


                என்பது குறித்தான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.


                நமது விவாத தலைப்பு இதுவே..!
 

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனையை,
 
            கட்டாயமாக்கலாமா..?
 
        வேண்டாமா..?
                பயன்படுத்திய கார் மார்க்கெட் இப்போது புதிய கார் மார்கெட்டைவிட நல்ல முன்னேற்றத்தை கொண்டிருக்கிறது. ஹோண்டா, டொயோட்டா போன்ற கார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற ப்ரீமியம் நிறுவனங்களும் பிரத்யேக பயன்படுத்திய கார் டீலர்ஷிப்புகளை திறக்க ஆரம்பித்துவிட்டன. 


இந்நிலையில், பயன்படுத்திய கார்களை வாங்குவதில் சில சிக்கனங்களும் இருக்கிறது, சிக்கல்களும் இருக்கிறது.


பயன்படுத்திய கார்கள் - ப்ளஸ்

     குறைவான விலை; நிறைவான கார்

    முதல்முறையாக கார் வாங்குவபவர்கள், முழுமையாக பழக யூஸ்டு கார் சிறந்தது

     பல வகையான கார்களும், ஒரே விலை விகிதத்துக்குள் கிடைக்கும்


பயன்படுத்திய கார்கள் - மைனஸ்

    ஓடோமீட்டர் டாம்பரிங் குறித்த அச்சம்

    'என்னுடைய கார்' என்ற முழுமையான உணர்வு கிடைக்காதது
    திரும்ப விற்பது கடினம்


பயன்படுத்திய கார்கள் - கேள்விகள்


    பயன்படுத்திய கார்களை வாங்குவது லாபமா? நஷ்டமா?


    டீலர்களிடம் வாங்கலாமா? நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வாங்கலாமா?


    OLX, Quikr போன்ற வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பலாமா? 
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????


ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..


இதை ஏத்துக்கிறீங்களா...???


அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க..